பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 ஆற்றங்கரையினிலே

திரித்து பாரடைஸ் எஸ்டேட் என்று ஆங்கிலத்தில் அமைத்தார். பரதேசியார் காலத்தில் அருள் விளைந்த இடம் காசாமேசர் கை வைத்தவுடன் பொருள் விளையும் பூமியாயிற்று. இன்றளவும் ஆங்கிலத்தில் பாரடைஸ் எஸ்டேட் என்ற பெயரே அதற்கு வழங்கி வருகின்றது.

ஆறு ஆண்டுகள் காசாமேசர் பரிவாரங்களோடு தங்கி யிருந்த இடம் ஒரு சிற்றுார் ஆயிற்று. பேர் ஆசை கொண்ட அவ்வர்த்தக கர்த்தர் காசாமேசர் புரம் என்று அதற்குப் பெயர் கொடுத்தார். ஆனால் காசி என்னும் பெயரின் வாசி யறிந்த தென்காசியார் அதைக் காசிமேசபுரம் என்று வழங்கலாயினர். முன் பின் அறியாத பரதேசியைச் சுவர்க்கத்தில் மாட்டிய வெள்ளையற்கும் வீடளிக்கக் கருதி அவர் பெயரை முத்தி தரும் காசியாக மாற்றினர் போலும் தென்காசி மக்கள் !

தொன்று தொட்டுப் பொருளும் அருளும் பொருந்தித் திகழ்வது தென்காசி நன்னகரம். அதைச் சார்ந்த மேலகரம், திருக்குற்றாலக் குறவஞ்சி நாடகத்தைத் தமிழகத்தார்க்குத் தந்தது. அந்த அகரத்திலே, குறவஞ்சிக் கவிஞர் குடும்பத் திலே பிறந்தருளினார் ஒரு பெருமகன். செந்தமிழையுஞ் சிவ நெறியையும் கண்னெனக் கருதி வளர்க்கும் திருவாவடு துறை ஆதீனத்தைச் சார்ந்து, தவ ஒழுக்கத்தில் தலைசிறந்து திகழ்ந்தார் அப்பெருமான். மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் என்னும் அவர் பெயரை அறியாதார் இந்நாட்டில் அறியாதாரே ஆவடு துறை ஆதீனத் தலைவராக அவர் அமர்ந்திருந்த காலத்தில் தமிழ் மொழியின் நிலை உயர்ந்தது; கலை சிறந்தது."