பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. ஆழவார் திருநகரி

பொருனையாறு வளம் பெருக்கும் நெல்லைத் திரு நாட்டில் தமிழுலகம் தலைக்கொண்டு போற்றும் பொதிகை மலை உண்டு; வைணவ உலகம் வணங்கி ஏத்தும் குருகைப் பதியும் உண்டு. தமிழ்ப் பெருந் தேர்க்கு அச்சாணி எனத் திகழும் அருந்தவ முனிவன் வாழும் மலை பொதிகை. வைணவத் தருவிற்கு ஆணி வேர்ாக விளங்கும் மாறன் பிறந்த ஊர் குருகை. -

குருகை என்பது குருகூர் என்ற பெயரின் குறுக்கம். பொருனை யாற்றின் தென் கரையில் சவியுறத் தெளிந்த சங்கணித் துறையில் உள்ளது அம்மூதூர். ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அவ்வூரில் வேளாண் மரபிலே தோன்றினார் ஒரு பெரியார். அவர் கருவிலே ஞானத் திருவுடையார். நெடுங்காலம் தவம் முயன்று பெற்ற தனியிளங் குழந்தையைக் கண்டு பெற்றாரும் உற்றாரும் பேரின்பம் எய்தினர்; மாறன் என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். ஆயினும் அக் குழந்தை முகமலர்ந்து தலையசைத்து விளையாடக் கண்டாரில்லை. குழலினும் இனிய மழலை மொழி பேசக் கேட்டாரில்லை. இங்ஙனம் உலக நடைக்கு மாறாக உயிர் வாழ்ந்த குழந்தையை அவ்வூரிலுள்ள திருமால் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். ஆலயத்தைக் கண்ட குழந்தை அகமகிழ்ந்து அங்கு ஒருசார் அமைந்த புளியமரத்தை நோக்கித் தவழ்ந்து, அதன் நிழலில் அமர்ந்தது. போதி மரத்தடியில் அமர்ந்த புத்தர் போலவும்,