பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி மாநகரம் 43

பாடியவர் தேவாரம் அருளிய மூவருள் ஒருவர். அந்தமில் அழகர்; சுந்தரமூர்த்தி.

திரு ஏகம்பத்தின் அருகே முருகவேள் உறையும் குமரக் கோட்டமும், காமாட்சியம்ம்ை அறம் வளர்க்கும் காமக் கோட்டமும் உண்டு. காசி விசாலாட்சியையும் மதுரை மீனாட்சியையும், காஞ்சிக் காமாட்சியையும் கருணையின் திருவுருவமாகக் கருதி, என்றும் வழிபடும் பெருமை சான்றது தமிழ் நாடு.

கச்சியம்பதியிலே திருமால் கோயில்கள் பல உண்டு. அப்பெருமான் நின்ற திருக்கோலமும், இருந்த திருக்கோலமும், பள்ளிகொண்ட கோலமும் கண்டு மகிழ்ந்த அடியார் ஒருவர்,

“நின்றான் இருந்தான்

கிடந்தான் இதுவன்றோ மன்றார் மதிற்கச்சி மாண்பு”

என்று வியந்து பாடினார்:

ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகக் காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு தென்னாட்டை ஆண்டனர் பல்லவ மன்னர்கள். அன்னார் ஆட்சி புரிந்தபோது கச்சி மாநகரம் உச்சநிலை அடைந்தது. கலைமகளும் திருமகளும் அங்குக் கலந்து உறைவிாராயினர். இக் காட்சியைக் கண்ட திருநாவுக்கரசர் “கல்வியே கரையிலாத காஞ்சி மாநகரம்” என்று கட்டுரைத்தார். வள்ளன்மை வாய்ந்த தெள்ளியர் அத் திருநகரில் வாழ்ந்தனர் என்று புகழ்ந்துரைத்தார் திருஞான சம்பந்தர். -

செல்வம் நிறைந்த அத் தலைநகரில் திருக்கோயில்கள் பல எழுந்தன. கயிலாசநாதருக்கு ஒரு கற்கோயில் கட்டினான் ராஜசிம்மன் என்னும் பல்லவ மன்னன்.” கயிலாய மலையில் இயற்கையாக அமைந்துள்ள