பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201 ஆற்றங்கரையினிலே

நம்மாழ்வாருக்கு இந்நாட்டில் வழங்கும் பெயர்கள் பலவாகும். அவற்றுள் சடகோபன் என்னும் பெயர் பெரு வழக்குடையது. நம்மாழ்வார்மீது கம்பர் இயற்றியதாகக் கருதப்படும் ஒர் அந்தாதி நூல் சடகோபர் அந்தாதி என்று பெயர் பெற்றுள்ளது.

இத்தகைய ஆழ்வார் பிறந்தருளும் பேறு பெற்ற திருநகரைக் காண ஆசையுற்றுத் தொண்டை. நாட்டினின்றும் புறப்பட்டு நெல்லை நாட்டை வந்தடைந்தார் உடையவர் என்னும் சிறப்புப் பெயருடைய இராமானுசர் அவர் புகழ் மலிந்த பாமன்னு மாறன் அடிபணிந்து உய்ந்தவர். அப்பெருமான் ஆழ்வார் திருநகரியின் அருகே வந்தபோது,

“ இதுவோ திருநகரி, ஈதோ பொருநல்

இதுவோ பரமபதத் தெல்லை - இதுவோதான் வேதம் பகர்ந்திட்ட மெய்ப்பொருளின் உட்பொருளை ஒதும் சடகோபன் ஊர்” என்று வியந்து போற்றினர் என்றால், அப் பதியின் பெருமையை விரித்துரைக்கவும் வேண்டுமோ?