பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 - ஆற்றங்கரையினிலே

கையிலே வரையாது கொடுக்கும் திறம் உண்டு கரவில்லை என்பது இப்பாட்டால் அழகுற விளங்குகின்றது.

இராசை முத்துசாமி வள்ளலின் பண்பாட்டை அறிந்த கவிஞர், தமிழ்நாட்டில் உள்ள நாவலர்களுக்கு ஒரு விண்ணப்பம் செய்கின்றார். கற்று அறிந்த கவிஞர்களே ! தும் மனக் கவலை தீர வேண்டுமானால் முத்துசாமி மன்னனைப் பாடுங்கள் ! அவன் நினைத்தால் உங்கள் வறுமை நிலை குலைந்து ஒடும் மூடர்கள் முன்னே நின்று இனி முட்டிமுட்டிப் பாடாதீர் ! இதுவரை கயவரைப் பாடிய காயிதங்களைக் காற்றாடியாக்கிப் பட்டமாய்ப் பறக்க விடுங்கள் : இளம் பிள்ளைகளுக்காவது அவை இன்பம் பயக்கும் ‘ என்று கொடாக்கண்டரைப் பழித் துரைக்கின்றார்.”

இவ்வாறு முத்தமிழ் வாணரின் வாழ்த்துரை பெற்ற வள்ளலின் குடும்பம் இன்றும் நெல்லை நாட்டில் வாழையடி வாழையென வாட்டமின்றி வாழ்ந்து வருகின்றது. -