பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 ஆற்றங்கரையினிலே

பணிந்து இணங்கி வாழ்வோம் என்று சொல்லிப் பாடு பார்க்கச் செல்வர் பள்ளியர் இருவரும்.

முக்கூடலின் தொன்மையும், சீர்மையும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே இயற்றப்பட்ட முக்கூடற் பள்ளு என்னும் நாடகத்தால் நன்கு விளங்கும். தமிழ் மொழி யிலுள்ள பள்ளு நாடகங்களுள் இதுவே தலைசிறந்ததாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன் பாண்டி நாட்டை ஆண்ட மாறவர்மன் பயிர்த் தொழிலை வளர்ப்பதற்கு ஒரு திட்டம் வகுத்து, முக்கூடலில் பெரியதோர் ஏரி வெட்டினான். அம்மன்னனது பட்டப் பெயர் ஸ்ரீவல்லபன் என்பது. அப்பெயரை அமைத்து ஸ்ரீவல்லபப் பேரேரி என்று அவ் ஏரியை அழைத்தனர். நாளடைவில் பேரேரி என்பது பேரி என மருவிற்று. ஸ்ரீவல்லபப் பேரி சீவலப்பேரி யாகச் சிதைந்தது. முக்கூடல் என்னும் பழம் பெயர் மறைந்து, சீவலப்பேரி என்பதே ஊரின் பெயராகவும் வழங்கலாயிற்று. எனவே, இந்நாளில் நெல்லை நாட்டிலுள்ள சீவலப்பேரியே பள்ளு நாடகத்தில் பாடப் பெற்ற முக்கூடலாகும்.

இப்போது சீவலப்பேரி ஒரு சிற்றுாராகிவிட்டது. ஆற்றுப் பெருக்கற்ற காலத்தில் அங்குள்ள பரந்த வெண்மணல், நடப்போர் அடிகளைச் சுட்டெரிக்கும். ஆற்றிலே நீராடச் செல்லும் மாதர்கள் அச்சுடுமணற் பரப்பில் அடிவைத்து நடந்து படும் அவதியைக் கண்ட பெரியோர் செக்கடிக்கப் பெண் கொடுத்தாலும், சீவலப் பேரியில் பெண் கொடுக்கலாகாது’ என்றார்கள். அவர் வாய் மொழி தென்னாட்டில் ஒரு பழமொழியாய் இன்றும் வழங்குகின்றது.

$4