பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ஆற்றங்கரையினிலே

கொற்கைத் துறையில் துறைவாணர்

குளிக்கும் சலாபக் குவால்முத்தும் ”

என்பது நெல்லை நாட்டுக் கவிஞராகிய குமர குருபர முனிவரது திருவாக்கு கொற்கைத் துறையில் விளைந்த முத்து உருண்டு திரண்டு தெள்ளிய முத்தாகத் திகழ்ந்ததனால் அதனைக் குவால் முத்து என்று சிறப்பித்தார் முனிவர். விளைந்து முதிர்ந்த விழுமுத்து ‘ என்று கொற்கை முத்தின் சீர்மையைப் பத்துப்பாட்டுள் ஒன்றாகிய மதுரைக்காஞ்சியும் பாடிற்று.

அயல் நாட்டு வணிகர் பொன்னையும் பொருளையும் தந்து வாங்கிச் சென்ற தென்னாட்டு முத்து, கடல் கடந்து பிற நாடுகளிற் போந்து மன்னர் முடியிலும் மாதர் அணியிலும் இலங்குவதாயிற்று என்று பழங்கால யவனர் குறிப்பொன்று பகர்கின்றது.

அந்நாளில் பாண்டி மன்னர்க்கு முத்துச் சலாபமே சிறந்த செல்வம். இதனை நன்கறிந்து பாடினார் நல்லிசைப் புலவராகிய ஒளவையார். ‘பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து “ என்பது அவர் வாக்கு கொற்கையில் அமைந்த முத்துச் சலாபத்தால் சிறப்புற்ற பாண்டி மன்னன் கொற்கைக் கோமான்’ என்றும், கொற்கைத் துறைவன் ’ என்றும் பாராட்டப் பெற்றான்.

ஒருகால் கொற்கைத் துறையின் முத்துச் சலாபத்தைக் காண்பதற்காகச் சென்றான் பாண்டி மன்னன். வேற்படை தாங்கிய வீரர் முன்னே செல்ல, வேழம் போல் நடந்து சென்ற வேந்தனைக் கண்டாள் ஒர் இளமங்கை பொதிகைச் சந்தனம் பூசிய அவன் மார்பின் அழகையே பார்த்துக் கொண்டு நின்றாள்; மன்னன் வீதியின் வழியே சென்று மறைந்த பின்னர், வீட்டின் உள்ளே சென்று மஞ்சத்தில் சாய்ந்தாள். காதலாகிக் கசிந்து கண்ணிர் உகுத்தாள். முத்து முத்தாகக் கன்னத்தில் உருண்டு ஓடிய கண்ணிரைக்