பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249 ஆற்றங்கரையினிலே

‘அடை’ என்ற பெயரும் வெற்றிலைக்கு உண்டு. அதனாலேயே அடைப்பை என்பது வெற்றிலைப் பையைக் குறிக்கின்றது. அடையோடு போடும் காயாகிய பாக்கு அடைக்காய் என்று சங்க நூல்களில் வழங்குகின்றது. அடைக்காய்க் கொட்டையே ஆங்கிலத்தில் அரிக்கனட் என்று சிதைந்துள்ளது. திருமணத்துக்கு அடைக்காய் வைத்து அழைக்கும் பழக்கம் இன்றும் தமிழ் நாட்டில் உண்டு.

மார்க்கப் போலோ தென்னாட்டுக்கு வந்த காலத்தில் தாம்பூலம் என்ற சொல் நாடெங்கும் வழங்கி வந்ததாகத் தெரிகின்றது. கலித்தொகையிலும், காளிதாசன் கவிதையிலும் எடுத்து ஆளப்பட்டுள்ளது இச்சொல். தாம்பூலத்தால் தென்னாட்டிலுள்ள எவ்வாயும் செவ்வாயாக மார்க்கப் போலோவுக்குக் காட்சியளித்தது.

இந்நாட்டுப் பண்பாட்டின் அடியாக எழுந்த சில பழக்க வழக்கங்கள் மேலை நாட்டவராகிய மார்க்கப் போலோவுக்குப் பெருவியப்பை அளித்தன. இந்நாட்டில் ஆண்களும், பெண்களும் நாள்தோறும் குளிக்கின்றார் களே ! தண்ணீர் குடிக்கும் கிண்ணத்தைத் தலைக்கு மேல் துக்கிப் பிடித்துக்கொண்டு நீரை அண்ணாந்து பருகுகின்றார்களே இரு கையாலும் உணவை எடுத்து உண்ணாமல் ஒரு கையால் எடுத்து உண்கின்றார்களே ! வீடு வாசல்களைச் சாணத்தால் மெழுகுகின்றார்களே ! அரையில் உடுத்த ஒர் ஆடையோடு வெளியே திரிகின்றார்களே “என்று அவர் எழுதியுள்ள குறிப்புகள் மேலை நாட்டவருக்கும், கீழை நாட்டவருக்கும் உள்ள வேற்றுமைகளை நன்கு உணர்த்துகின்றன.

இவ்வாறு தென்பாண்டி நாட்டுப் பழக்க வழக்கங் களை விரித்தெழுதிய மார்க்கப் போலோ காயலி ன் அருகே யிருந்த முத்துச் சலாபத்தையும் விளக்கமாகக்