பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயத்தாலு 226

உப்பாற்றங்கரையில் உள்ளது. கழுகு மலையிலே தோன்றித் சித்திரா நதியில் வந்து சேரும் உப்பாறு முன்னாளில் கயத்தாறு என்னும் பெயர் பெற்றிருந்தது. ஆதலால் அதன் கரையில் எழுந்த ஊர் கயத்தாறு என்றே அழைக்கப் பட்டது. கோதண்டராம நதி என்ற பெயரும் அதற்கு உண்டு.

பாஞ்சாலங்குறிச்சியிலே பிறந்து வெள்ளை யரசாங்கத்தை அலைத்துக் குலைத்து அலற வைத்த மானவீரனாகிய வீரபாண்டிய கட்டபொம்மனின் கடைசி நாளைக் கண்டதும் கயத்தாறே !

“ வானம் பொழியுது பூமி விளையுது

மன்னவ னுக்கேது தீர்வைப் பணம் தானம் தெரியாமல் வந்து தலையிட்டால்

மானம் அழிந்து மடிந்திடுவீர்”

என்று மார்பு தட்டிய வீரனை வஞ்சகமாகப் பிடித்துக் கயத்தாற்றில் உள்ள புளிய மரத்தில் தூக்கிட்டுக் கொன்றது வெள்ளை ஆரசாங்கம். வேற்று நாட்டாரது ஆட்சிக்கு அடங்கி ஆண்மை யிழந்து வாழ்வதினும் அவரோடு போர் தொடுத்து மாள்வது நன்று எனக் கருதி அம் மான வீரனை மனக்கோயிலில் அமைத்துப் பொது மக்கள் போற்றுவாரா யினர். வீரபாண்டியன் புகழுடம்பு பெற்ற புளிய மரத் தடியில் வீரக்கல் நாட்டிப் பாட்டாலும் உரையாலும் பாராட்ட விரும்பிய மாந்தர் வெள்ளையரசாங்கத்தின் சீற்றத்திற் கஞ்சி அவ்வாறு செய்யா தொழிந்தனர். ஆயினும் அவ்வழியாகச் செல்லும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கல்லெடுத்து அப்புனிதமான இடத்தில்-இட்டுப் போற்றி வருகின்றனர். அன்று முதல் நன்றி மறவாத தமிழ் மக்கள் அங்கு துாவிய கற்கள் குன்று போலக் குவிந்து இன்றும் காட்சி தருகின்றன. பாஞ்சாலங்குறிச்சியிலே பிறந்து வீரப் புகழ் பெற்ற கட்டபொம்மன் கயத்தாற்றிலே கற்கோயில் கொண்டு வீற்றிருக்கின்றான்.