பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229 ஆற்றங்கரையினிலே

“ வஞ்சியேன் என்று.அவன்தன்

ஊர்உரைத்தான் யானும்அவன் வஞ்சியான் என்பதனால்

வாய்நேர்ந்தேன் - வஞ்சியான் வஞ்சியேன் வஞ்சியேன்

என்றுரைத்தும் வுஞ்சித்தான் வஞ்சியாய் வஞ்சியார் கோ” என்று மனம் வருந்தி முறையிட்டாள். என் உள்ளம் கவர்ந்த வீரன் வஞ்சியேன் வஞ்சியேன் என்று பன்முறை உரைத்தான். அப்போது வஞ்சியாகிய தன் ஊரைக் குறித்தான் என்று நான் எண்ணவில்லை; வஞ்சித்து ஒழுகமாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்தான் என்று எண்ணினேன். அதை நம்பி நானும் அவனையே மனப்பதாக வாக்களித்தேன். ‘ வஞ்சியேன்” என்றவன் ‘இப்போது என்னை வஞ்சித்து விட்டானே’ என்று தன் ஆற்றாமையை அறிவித்தாள்.

இத்தகைய வஞ்சி நாட்டிலே பல நாடுகள் உண்டு. அவற்றுள் ஒன்று நாஞ்சில் நாடு. அந்நாடு சாலப் பழமை வாய்ந்தது: -

“பண்ணை பெருத்த பழநாடு - சுற்றிப் பார்த்திடக் கண்கள் குளிரும் நாடு” என்று பாராட்டப் பெற்ற அந்ந்ாட்டில் உப்பும் நெல்லும் ஒய்வின்றி விளையும்; குமரிக் கடலும் குடமலைத் தொடரும் அர்ணாக நின்று காவல் புரியும், ஆறும் மழையும் நீர்வளம் பெருக்கும்; அருந்தமிழ் ஆர்வம் அளவின்றிச் சுரக்கும்.

வளமார்ந்த அந்நாட்டை நீருட்டி வளர்ப்பதற்கு ஒரு ஆறும் உண்டு. பழையாறு என்பது அதன் பெயர். அவ்வாற்று வெள்ளத்தை அணைகளால் அணைத்து, கால்களில் எடுத்து, கழனிகளிற் பாய்ச்சி நற்பயன் பெறுவர் நாஞ்சில் நாட்டார். பழையாற்றின் முதல் அணை பாண்டியன் அணை என்று பெயர் பெற்றுள்ளது.