பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. பூதப்பாண்டி நாஞ்சில் நாட்டை நஞ்சை (நன்செய்) நாடென்றும் சொல்வதுண்டு. தொன்று தொட்டுத் தாளாண்மையுடைய வேளாளர் அந்நாட்டுப் பழங்குடிகளாகப் பணியாற்றி வருகின்றார்கள். அன்னார் உழைப்பாலேயே நாஞ்சில் நாடு நஞ்சை நாடாயிற்று. மேலைக் கடலைக் கடந்து வரும் மாரிக்காற்று அந்நாட்டிலே பெருமழை பொழியும். அதன் துவானமே நெல்லை நாட்டில் சாரல்’ எனப்படும். இவ் உண்மையை அழகாக உணர்த்துகின்றது மனோன்மணியம்.

“இப்பெருத் தேயத்து எங்கும் இராப்பகல்

தப்பினும் மாரி தன்கடன் தவறா கொண்மூ என்னும் கொள்கலம் கொண்ட அமிழ்தினை அவ்வயிற் கவிழ்த்தபின் செல்புழி வடியும் நீரே நம்மிடிதீர் சாரல்” என்று பேசினான் பாண்டி நாட்டு அமைச்சன். அரசே! இரவு பகல் வரத் தவறினாலும் நாஞ்சில் நாட்டில் மழை பெய்யத் தவறுவதில்லை. கருமேகம் அந்நாட்டில் மழையைக் கொட்டுகின்றது. பின்பு அது வேகமாகச் செல்லும் வழியில் துறும் துளிகளே சாரல் ஆகும்’ என்று அவன் பேசிய மொழிகளால் நாஞ்சில் நாட்டு நீர்வளம் நன்கு விளங்கும். -

பல துளி பெரு வெள்ளம் என்பது இந்நாட்டில் ஒரு பழமொழி. முன்னொரு காலத்தில் தென்பாண்டி நாட்டை ஊட்டி வளர்த்த நதி யொன்று பல்துளி (பஃறுளி) என்னும் பெயர் பெற்றிருந்தது. அந்நதியையும், அதனால் வளம் பெற்ற நாட்டையும் கொடுங்கடல் கொள்ளை கொண்டது.