பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முசிரி 238

செல்வர் இருவரையும் ஒருங்கே கண்ட சேரநாட்டு மக்கள் இன்பக் கண்ணிர் சொரிந்தார்; மலர்மாரி பொழிந்தார்.

பொது மக்களின் ஆர்வத்தை அறிந்து அகமகிழ்ந்த சேரமானும் சுந்தரரும் ‘அஞ்சைக் களம் என்னும் ஆலயத்திற் போத் து. ஈசனை நெஞ்சார வழிபட்டனர். ‘அஞ்சைக் களத்து அப்பனே என்று அழைத்துச் செஞ்சொற்பாமாலை அணிந்தார் கந்தரர். -

“அலைக்குங் கடலங்கரை மேல் மகோதை

அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே”

என்ற தேவாரத் திருப்பாசுரத்தில் மகோதை என்று சேரமானது தலைநகரம் குறிக்கப்படுகின்றது. அதனால் மகோதை என்ற பெயரும் கொடுங்கோளுருக்கு உண்டு என்பது நன்கு விளங்கும்.

கோதை என்பது சேர மன்னர்க்குரிய சிறப்புப் பெயர்களில் ஒன்று. கோதையார்க்கு: தலைநகரமாகிய கொடுங்கோளூர் மகோதை என்று பெயர் பெற்றது போலும் !

“கோதை அரசர் மகோதை யெனக்

குலவு பெயரும் உடைத்து உலகில்”

என்று திருத்தொண்டர் புராணம் தெரிவிக்கிறது.

இத்தகைய மகோதைப் பட்டினத்தில் ஒரு நாள் கோதையரசர் பவனி வந்தார். அவர் திருமேனியைக் காண்பதற்கு ஆசைப்பட்ட இளமங்கையர் பட்டும் பணியும் புனைந்து கொண்டு கதவைத் திறந்து எட்டிப் பார்த்தனர். எட்டாப் பழத்துக்குக் கொட்டாவி விடலாமோ ?’ என்று அவர்களைத் தட்டி அடக்கி வீட்டினுள்ளே அனுப்பிக் கதவைத் தாழிட்டனர் தாய்மார்கள். அவர்கள் வீட்டினுள்ளே வேலை செய்யும் வேளை பார்த்துக் கதவைத் திறந்து, பின்னும் தெருவுக்குச் சென்றனர்.