பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V11. வடநாடு

“வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடல் துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும்”

- பட்டினப்பாலை. 44. கோதாவரித்துறை

காலைப் பொழுது. கதிரவன் ஒளி வீசி எழுந்தான். கமலப் பள்ளியில் கண்ணுறங்கிய அன்னம் விழித்து எழுந்து அருகேயிருந்த பூஞ்சோலையிற் சென்று உலாவிற்று. அதன் நடையழகைக் கண்டு மகிழ்ந்தன பறவையெல்லாம்.

சோலைைையத் தலைநிமிர்ந்து பார்த்தது அவ்வன்னம். இப் பூஞ்சோலைக்கு எனது நடையன்றோ அழகு செய் கின்றது? இன்னிசை பாடும் வண்டினங்களும் என் நடையில் ஈடுபட்டு வாயடங்கி விட்டனவே என்று எண்ணி இறுமாப்புற்றது. அதன் அகத்தில் எழுந்த செருக்கு முகத்திலே தெரிந்தது.

அன்னத்தின் செருக்கைக் கண்டு வெறுப்புற்ற வண்டுகள் என்னதான் இருந்தாலும் இந்த அன்னத்திற்கு இத்துணை கர்வம் ஆகாது. இச்சோலைக்கு அன்னநடை ஒன்றுதானா அழகு தருகின்றது? மயில் அழகாக ஆட வில்லையா? குயில் இனிதாகக் கூவவில்லையா? கிளி