பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 ஆற்றங்கரையினிலே

மழலை மொழி பேச வில்லையா? செருக்குற்றவர் சீரழிவர் என்பதை இவ் ஏழை அன்னம் அறியவில்லை : இந்த மட அன்னத்திற்கு ஒரு காலம் வந்தால் சின்னஞ்சிறு வண்டுகளாய எமக்கும் ஒரு காலம் வரும் என்று கருதிப் பொறுத்திருந்தன.

அப்போது அச்சோலையிலே பூப்பறிக்க வந்தனர் சில மங்கையர் இளங் கிளிகளைக் கையில் வைத்துக் கொஞ்சிப் பேசிக்கொண்டு அழகுற நடந்து வந்த வஞ்சியரைத் கண்டது அவ்வன்னம். இம்மாதரது நடையின் முன்ன்ே என் நடை செல்லாது ‘ என்று செருக்கு ஒழிந்தது; தல்ை கவிழ்ந்து சோலையை விட்டு வெளியே சென்றது.

அன்னத்தின் தோல்வியைக் கண்ட வண்டுகள் ஆனந்த முற்றன. விளையாட்டரங்கத்தைச் சுற்றி நின்று வெற்றி தோல்விகளைக் கண்டு கைகொட்டி ஆர்க்கும் சிறுவரேபோல் செருக்கழிந்த அன்னத்தின் சிறுமை கண்டு ஆரவாரம் செய்தன வண்டுகள். * -

“ பாகொக் கும்சொல் பைங்கிளி யோடும்

பலபேசி மாகத் தும்பர் மங்கையர் நான

மலர்கொய்யும் தோகைக் கொம்பின் அன்னவர்க்கு அன்னம்

நடைதோற்றுப் போகக் கண்டு வண்டினம் ஆர்க்கும்

பொழில்கண்டார்”

என்று இக்காட்சியை ஒரு சொல் ஒவியமாக எழுதி யமைத்தார் கம்பர்.

மிதிலை மாநகரில் அன்னங்கள் ஆடும் ஒர் அழகிய துறை அமைந்திருந்தது. அதன் அருகே சிறந்தோங்கி நின்றது சீதையின் கன்னிமாடம். ஒரு நாள் அம்மாடத்தின் மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்றை நுகர்ந்து