பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோதாவசித்துறை 242 நின்றாள் சீதை. அப்போது வீதியின் வழியே நடந்து சென்ற இராமன் தற்செயலாகக் கண்ணெடுத்து, மாடத்தில் நின்ற மங்கையை நோக்கினான். மங்கையும் எதிர் நோக்கினாள். கண்ணொடு கண் கலந்தது; காதல் பிறந்தது. தன் உள்ளங் கவர்ந்த அண்ணலின் பேரழகைக் கண்ணால் முகந்து பருகினாள் சீதை. அவ்வீரனது வேழ நடை அவள் உள்ளத்தை அள்ளுவதாயிற்று.

கன்னி மாடத்தின் மேடையிலே கண்டு காதலித்த மங்கையை மீண்டும் மிதிலை மன்னன் மாளிகையில் காணும் பேறு பெற்றான் இராமன். மன்னரும் முனிவரும் அமர்ந்திருந்த மணி மண்டபத்தை நோக்கி நடந்துவந்தாள் மணமகளாகிய சீதை.

“அன்னமும் அரம்பையரும் ஆரமிழ்தும் நான

மன்னவை இருந்த மணிமண்டபம் அடைந்தான்”

அப்பொழுது அன்ன நடையையும் வென்ற சீதையின் அணி நடையைக் கண்டு அகமகிழ்ந்தான் இராமன். இத்தகைய நம்பியும் நங்கையும் திருமணம் புரிந்துகொண்டு வாழ்ந்தார்கள்.

அயோத்தி மாநகரில் அரசு வீற்றிருந்து ஆளுதற்குரிய தலைமகனான இராமன் திருநாடு துறந்து கானகம் செல்லும் நிலை வந்துற்றது. அதைக் குறித்து அவன் சிறிதும் வருந்தினான் அல்லன், மரவுரி தரித்து மாநகரினின்றும் புறப்பட்டான். r

அந்நிலையில் சீதையும் மரவுரி புனைந்து உடன் எழுந்தாள். காதல் மனையாளின் கருத்தை அறிந்தபோது வீரன் திருமுகத்தில் கவலை படர்ந்தது. மாளிகையன்றி மற்றோரிடம் அறியாத சிதை கானகத்தின் கடுமையை எவ்வாறு பொறுப்பாள் என்று வருந்தினான். மந்த மாருதம் தவழும் மாளிகையில் மெல்லிய மஞ்சத்திலே துயின்று