பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. காசி

‘ கங்கைக்கு நிகரான நதியும் இல்லை; காசிக்கு நிகரான பதியும் இல்லை என்பது இந்துக்கள் கொள்கை, தொன்றுதொட்டு, பாரத நாட்டு மன்னரும் அறிஞரும் கங்கையாற்றையும் காசி மாநகரையும் வணங்கிப் போற்றி வாசி பெற்றுள்ளார்கள்.

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே தமிழ்நாட்டில் தோன்றிய முனிவர் ஒருவர் காசியம்பதியைக் காண ஆசைப் பட்டார்; காடும் மலையும் கடந்து அப்பதியை அடைந்தார். கங்கைக் கர்ையிலே நின்று, பொங்கிப் பரந்து சென்ற பெரு வெள்ளத்தை நோக்கினார். அவர் உள்ளத்தில் இன்ப வெள்ளம் பொங்கிற்று.

எங்கும் புகழ்பெற்ற கங்கை மாநதியே காசி நகரில் உன்னைக் கண்டு வணங்கும் ஆசையால் எத்தனையோ காத வழி நடந்தேன் கடுந்துயர் உழந்தேன். ஆயினும் இங்கு வந்து சேர்ந்தவுடன் நான் பட்ட பாடெல்லாம் பறந்தோடி மறைந்தது; தாய் முகம் கண்ட சேய்போல் மனம் தழைத்தேன்:

கருணை வடிவாய திருநதியே : பாரதநாடு செய்த பெருந் தவத்தின் பயனாக இமயமலையிலே பிறந்தாய் ! விண்ணுக் கடங்காமல், இமய வெற்புக்கு அடங்காமல் எழுந்த உன் வெள்ளத்தைப் பேணி அனைத்துத் தன் வேணியில் அமைத்தான் என்னையாளுடைய ஈசன்,