பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VI. ஈழ நாடு

“ சிங்களத் தீவினுக்கோர் பால மமைப்போம்

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்”

- பாரதியார். 47. மாதோட்டம்

இலங்கை எனப்படும் ஈழநாட்டில் நெடுங்காலமாக வழங்கி வரும் மொழிகள் சிங்களமும் தமிழும். அங்கு நிலவும் சமய நெறிகள் சாக்கியமும் சைவமும்.

தமிழகத்திற்கு அப்பாற்பட்ட இலங்கை முதலிய நாடு களில் அமைந்த திருக்கோயில்களையும் திசை நோக்கித் தொழுதனர் தேவாரம் பாடிய பெரியோர். திருக்காளத்தி மலையில் நின்று கயிலாச மலையைப் பாடினார் திருஞான சம்பந்தர். அவ்வண்ணமே இராமேச்சுரத்திலிருந்து கடல் சூழ்ந்த இலங்கையில் உள்ள சிவாலயங்களைப் பாடிப் பரவினார் அப்பெருமான். இச்செய்தியைத் தெரிவிக் கின்றது. திருத்தொண்டர் புராணம்.

ஈழநாட்டிலே திருக்கோணமலையும் மாதோட்ட நகரும், தெய்வ மணக்கும் திருப்பதிகள். இவ்விரண்டும் தேவாரப் பாடல் பெற்ற பழம்பதிகள். பாலாவியாற்றின் கரையிலே பண்புற அமைந்தது மாதோட்டம், அந்நகரில் கண்ணுக்கினிய தண்ணறுஞ் சோலையின் நடுவே நின்ற கேதீச்சரம் என்னும் திருக்கோயிலை மனக் கண்ணால் கண்டு மகிழ்ந்து பாடினார் திருஞான சம்பந்தர்.