பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. கதிர்காமம்

ஆறுகளே நாட்டின் நல்லணிகள் என்று பாடினர் தமிழ்க் கவிஞர். சான்றோர் கவி யெனச் சென்ற கோதாவரியாறு புவியினுக்கு அணியாய் விளங்கிற் றென்று போற்றினார் புலவர் பெருமானாகிய கம்பர். தமிழகத்தில் வழங்கும் ஆற்றுப் பெயர்களில் பொன்னும் முத்தும் மணியும் அமைந்திருத்தல் இதற்கு ஒரு சான்றாகும்.

கண்ணப்பர் பணி செய்த காளத்தி மலையிலே பொன் முகலி என்னும் பொன்னாறு பாய்கின்றது. முதுகுன்றம் என்னும் பழம் பெயருடைய விருத்தாசலத்தை வலம் செய்கின்றது முத்தாறு. அழகர் மலையாகிய திருமாலிருஞ் சோலையை அணி செய்கின்றது சிலம்பாறு. இலங்கையின் தென்பகுதியிலுள்ள கதிர்காமம் என்ற திருப்பதியிலே மாணிக்க கங்கை என்னும் மணியாறு ஒடுகின்றது. அவ் ஆற்றங்கரையிலே அறுமுகச் செவ்வேளாகிய முருகன் கோயில் கொண்டுள்ளான்.

கடல் சூழ்ந்த இலங்கையில் உள்ள முருகன் பதிகளுள் தலை சிறந்தது. கதிர்காமமே. அப்பதியில் உறையும் பெருமானை

“கதிர்காம வெற்பில் - உறைவோனே

கனமேரு ஒத்த - புயவீரா !”

என்று ஆதரித்து அழைத்தார் அருணகிரியார். குன்று தோறும் நின்று அருள் புரியும் இறைவன் முருகன் என்பது