பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிர்காமம் 262

கண்டான்; காதல் கொண்டான். கற்பகத்தின் பூங் கொம்போ ! காமன் தன் பெரு வாழ்வோ ! என்று அவள் அற்புத மேனியின் அழகை நினைந்து நெடுமூச்செறிந்தான் கதிர்காம நாதனைக் கைதொழுத பலன் கண்கடாகக் கிடைத்தது என்று எண்ணித் தோழன் ஒருவனை அவளிடம் தூது அனுப்பினான்.

பாவை, தூதன் மொழி கேட்டுச் சீறினான். மாதவர் நோன்பையும் மடவார் கற்பையும் காக்கும் கடமை பூண்ட காவலனோ இவ்வாறு கருதினான் என்று எள்ளி நகைத்தாள்.

மங்கை மறுத்தாள் என்று அறிந்த மன்னன் மானத்தால் மனம் புழுங்கினான்; அவளைப் பற்றிக் கொணருமாறு படைத் தலைவரை ஏவினான். மறப்படை சென்று மங்கை தங்கியிருந்த மடத்தை வளைத்தது; ஆர்ப்பரித்தது. ‘திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்று திடமாக நம்பிய நங்கை கதிரை வேலனைக் கை கூப்பித் தொழுதாள்.

“ காக்கக் கடவியநீ

காவாது இருந்தக்கால் ஆர்க்குப் பரமாம்

அறுமுகவா - பூக்கும் கடம்பா, முருகா

கதிர்வேலா நல்ல

இடங்காண் இரங்காய் இனி”

என்று பரிந்து அழைத்தாள். அப்போது ஊரார் திரண்டு எழுந்தனர். மன்ன்ன் படையை வெருட்டி அடித்தனர். கண்டியரசன் செய்கையைக் கண்டித்தனர். மானம் இழந்த காவலன் ஒடி மறைந்தான். மறுவிலாக் கற்புடைய அம்மாது பல்லாண்டு பணி செய்து எண்பதாண்டுகளுக்கு முன்பு கதிரேசன் திருவருளிற் கலந்தாள்.