பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263 ஆற்றங்கரையினிலே

தமிழ் மக்களின் பரந்த மனப்பான்மைக்கு ஒரு சிறந்த சான்றாகத் திகழ்வது கதிர்காமம். தொன்று தொட்டுத் தமிழருக்குக் கண்கண்ட தெய்வமாகத் திகழ்பவன் முருகன். முத்தமிழால் வைதாரையும் வாழ்விப்பவன் முருகன். இத்தகைய இறைவனைக் கதிர்காமத்தில் பூசை செய்பவர் சிங்களக் குருக்கள்.

கதிரேசன் திருவுருவத்தை ஞானக் கண்ணால் கண்டவர் உண்டு ஊனக் கண்ணால் கண்டவர் எவரும் இலர். அருவமாய் நின்று அடியார் பல்லாயிரவரை ஆடித் திருவிழாவில் ஆட்கொண்டருளும் அறுமுகப் பெருமானை மனமாரப் போற்றி, கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியே கதிரேசா தமிழகத்தையும் ஈழநாட்டை யும் இணைத்து நிற்கும் தனிப் பெருந்தெய்வமே இருநாடும் என்றென்றும் இசைந்து வாழ அருள் புரிவாய் என்று திசைநோக்கித் தொழுகின்றோம்.