பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 266 3. திருக்காளத்தி

30 : 1. மாகமார் திருக்காளத்தி

மலையெழு கொழுந்தாய் உள்ள

ஏகநா யகரைக் கண்டார்

எழுந்தபே ருவகை அன்பின்

வேகமானது.மேற் தெல்ல

மிக்கதோர் விரைவினோடும்

மோகமாய் ஒடிச் சென்றார்

தழுவினார், மோந்து நின்றார்”

மோகம் - மேகம், ஆகாயம் உவகை மகிழ்ச்சி)

- பெரிய புராணம்.

31 : 2. “ நின்றசெங் குருதி கண்டார்

நிலத்தினின்று ஏறப் பாய்ந்தார்

குன்றென வளர்ந்த தோள்கள்

கொட்டினார், கூத்தும் ஆடி

நன்றுதான் செய்த இந்த

மதியென நகையும் தோன்ற

ஒன்றிய களிப்பி னாலே

உன்மத்தர் போல மிக்கார்”

(உன்மத்தர் - பித்தர்)

- பெரிய புராணம்

4. திருவேங்கடம்

37 : 1. “வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்

ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி இருமருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து மின்னுக்கொடி உடுத்து விளங்குவில் பூண்டு நன்னிற மேகம் நின்றது போலப் பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி