பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267 - ஆற்றங்கரையினிலே

நலங்கிளர் ஆரம் மார்பில் பூண்டு பொலம்பூ ஆடையில் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணம்.” (மீமிசை - மேலே, அணங்கு ஆழி வருத்தும் சக்கரம், பொலம்பூ ஆடை - அழகிய பொன்னாடை, நின்ற வண்ணம் - நின்ற திருக்கோலம்.)

- சிலப்பதிகாரம்.

37 : 2. “ பெருகு மதவேழம்

மாப்பிடிக்கு முன்நின்று இருகண் இளமூங்கில்

வாங்கி - அருகிருந்த தேன்கலந்து நீட்டும்

திருவேங் கடம்கண்டீர் வான்கலந்த வண்ணன் வரை.” (வேழம் ஆண்யானை, பிடி பெண்யானை வரை மலை. - பூதத்தாழ்வார்.

38 : 3. “ செடியாய வல்வினைகள்

தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா

நின்கோயி லின்வாசல் அடியாரும் வானவரும்

அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துஉன்

பவளவாய் காண்டேனே”

(செடி-பாவம்) - குலசேகர ஆழ்வார்.

38 : 4. “ குன்றும் ஏந்திக் குளிர்மழை காத்தவன்

- அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்

சென்று சேர்திரு வேங்கட மாமலை ஒன்று மேதொழ நம்வினை ஒயுமே.”

(ஞாலம்-உலகம், ஒயும்-ஒழியும்.)

- நம்மாழ்வார்.