பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 ஆற்றங்கரையினிலே

8. திருவதிகை 59 : 1. “ கொல்லாத சூலைநோய்

குடர்முடக்கித் தீராமை எல்லாரும் கைவிட்டார்

இதுசெயல்என் முன்பிறந்த நல்லாள்பால் சென்றுஇயம்பி

நான்உய்யும் படிகேட்டுஇங்கு அல்லாகும் பொழுது அணைவாய்

என்றார்என்று அறிவித்தான்.”

- பெரிய புராணம்.

60 : 2. “ இடையறாப் பேரன்பும் மழைவாரும்

இணைவிழியும் உழவாரத்தின்

படையறாத் திருக்கரமும் சிவபெருமான்

திருவடிக்கே பதித்த நெஞ்சும்

நடையறாப் பெருந்துறவும் வாகீசப்

பெருந்தகைதன் ஞானப் பாடல்

தொகையறாச் செவ்வாயும் சிவவேடப்

பொலிவழகும் துதித்து வாழ்வாம்”

- காஞ்சிப் புராணம்

62 : 3. “ சுண்ணவெண் சந்தனச் சாந்தும்

சுடர்த்திங்கள் சூள மணியும் வண்ண உரிவை உடையும்

வளரும் பவள நிறமும் அண்ணல்அரண் முரண்ஏறும் அகலம்வளாய் அரவும் திண்ணன் கெடிலப் புனலும்

உடையார் ஒருவர் தமர்நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லை;

அஞ்ச வருவதும் இல்லை.” (திங்கள் சந்திரன், உரிவை - தோல், ஏறு காளை, அகலம் - மார்பு; தமர் - அடியார்)

- திருநாவுக்கரசர் தேவாரம்.