பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 282

18. கும்பகோணம் 14 . “ தொண்ட ராகித் தொழுது பணிமினோ பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர் விண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரைக் கொண்ட வன்உறை யும்குட மூக்கிலே.”

- திருநாவுக்கரசர் தேவாரம்,

“எங்கள் பெருமான் இமையோர் தலைவன்நீ செங்கண் நெடுமால் திருமார்பா - பொங்கு படமூக்கின் ஆயிரவாய்ப் பாம்பனைமேற்

சேர்ந்தாய் குடமூக்குக் கோயிலாக் கொண்டு.”

(இமையோர் . தேவர்)

- பூதத்தாழ்வார்.

115 : 2. “நடந்த கால்கள் நொந்தவோ

நடுங்க ஞாலம் ஏனமாய்

இடந்த மெய்கு லுங்கவோ

விலங்கு மால்வ ரைச்சுரம்

கடந்த கால் பரந்த

காவிரிக் கரைக்கு உந்தையுள்

கிடந்த வாறு எழுந்திருந்து

பேசு வாழி கேசனே.”

- திருமழிசை ஆழ்வார்.

8 :

3.

“தாவிமுதற் காவிரிதல் யமுனை கங்கை

சரஸ்வதிபொற் றாமரையுட் கரணி தெண்ணீர்க் கோவியொடு குமரிவரு தீர்த்தம் சூழ்ந்த

குடந்தைக்கீழ்க் கோட்டத்தெம் கூத்தனாரே’

- திருநாவுக்கரசர் தேவாரம்.