பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

பின்னிணைப்பு

Wi. சேர நாடு

43. முசிரி

235 : 1. “ கள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க

யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிரி.”

- அகநானூறு.

237 : 2. “ மாவீற் றிருந்த பெருஞ்சிறப்பின்

மன்னும் தொன்மை மலைநாட்டுப் பாவீற் றிருந்த பல்புகழார்

பயிலும் இயல்பிற் பழம்பதிதான் சேவீற் றிருந்தார் திருவஞ்சைக்

களமும் நிலவிச் சேரர்குலக் கோவீற் றிருந்து முறைபுரியும்

குலக்கோ மூதூர் கொடுங்கோளுர் (சே - காளை, இடப வாகனம்)

- பெரிய புராணம்.

238 : 3. “தலைக்குத் தலைமாலை அணிந்ததென்னே

சடைமேல் கங்கைவெள்ளம் தரித்ததென்னே

அலைக்கும் புலித்தோல்கொண்டு

அசைத்ததென்னே

அதன்மேல் கதநாகம்கச் சார்த்ததென்னே

மலைக்கு நிகர்ஒப்பன வன்திரைகள்

வலித்தெற்றி முழங்கிவலம் புரிகொண்டு

அலைக்கும் கடலங்கரை மேல்மகோதை

அணியார் பொழில்அஞ்சைக் களத்தப்பனே.”

- சுந்தரர் தேவாரம்