பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்காளத்தி - - 30 பெருமானே! கண்கள் மூன்றுடைய காளத்தி நாதனுக்குக் கண் உவந்து அளித்த அண்ணலே என் அப்பனே கண் அப்பனே! எல்லையற்ற உன் அன்பின் திறம் கண்ட ஈசன், போலியாகிய என்னையும் ஒரு பொருளாகக் கருதி அருள் செய்வானோ” என்று பொருமினார் உள்ளம் உருகினார்.

கண்ணப்பன் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற திண்ன்னன் வேடர் குலத்தில் பிறந்தவன்.மலையரசன் பெற்ற திருமகன். திண்ணிய மேனி வாய்ந்த மைந்தனுக்குத் திண்னன் என்று பெயரிட்டான் அவ்வேடர் மன்னன். வீரக் கொழுந்தென வளர்ந்தான் திண்ணன், வேட்டைத் தொழிலுக்கு ஏற்ற பயிற்சியெல்லாம் பெற்று வேடர் குலமணியாய் விளங்கினான். -

ஒரு நாள் வேடருடன் கூடிக் காட்டிலே வேட்டை யாடப் போந்தான் அக்காளை கானவர்கள் காட்டைக் கலைத்த பொழுது கறுத்துக் கொழுத்த விலங்கொன்று கதித்து எழுந்து ஓடிற்று தோழர் இருவரோடு அவ் வலிய விலங்கைத் தொடர்ந்தான் திண்னன். காட்டிலும் மேட்டிலும் காதவழி இழுத்து அடித்துக் காளத்தி மலையடிவாரத்தில் அவன் கை வாளால் வெட்டுண்டு விழுந்தது அவ்விலங்கு.

அம் மலை மீது சற்று இளைப்பாறச் சென்ற திண்ணன் அங்கே காளத்தி நாதனைக் கண்டான் கரை காணாக் காதல் கொண்டான். புள்ளத்திற் பாயும் வெள்ளம் போல் விழுந்து அடித்து ஓடினான். காளத்தியப்பனைக் கட்டித் தழுவினான் உடன் வந்த தோழரை மறந்தான்; உற்ற பசியையும் மறந்தான். “அல்லும் பகலும் விலங்குகள் திரியும் இம் மலையில் தன்னந் தனியாக அமர்ந்து உள்ளானே எம்பெருமான்! இவரைக் காப்பவர் எவர்ையும் காணோமே ! பொழுதறிந்து உணவளிப்பார் யாரும் இல்லையே!” என்று உளம் வருந்தி அழுதான். ஈசனது