பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 ஆற்றங்கரையினிலே

மற்றொருவர் மாமல்லபுரத்தார்; இன்னொருவர் திருமயிலையார். முதல் ஆழ்வார்கள் என்று போற்றப் பெறுபவர் இவரே. ஒத்த உணர்ச்சியுடைய இம் மூவரும் மழைக்காக ஒதுங்கி நின்று பாடும் பெருமை பெற்ற திருக்கோவலுரையும் அவ்வூரைத் தலைநகராகவுடைய பெண்ணை நாட்டையும் புகழ்ந்து பாடினார் ஒரு கவிஞர்.

“ பாவரும் தமிழால் பேர்பெறு பனுவற் பாவலர் பாதிநாள் இரவில் மூவரும் நெருக்கி மொழிவிளக்கு ஏற்றி முகுந்தனைத் தொழுதநன் னாடு”

என்பது அவர் திருவாக்கு

நல்லோர் பலர் திருக்கோவலூரை நாடி வந்தனர். அன்னவருள் ஒருவர் பொய்யறியாப் புலவர் பெருமானாகிய கபிலர். பாரி வள்ளலின் ஆருயிர்த் தோழராகிய இப் புலவர் அவனது பறம்பு மலையிலே பெரும்பாலும் தங்கி இருந்தார். குறுநில மன்னனாகிய பாரியின் கொடைத் திறம் அவர் உள்ளத்தை அள்ளிக் கொண்டது.

“முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு

முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்” என்று தனக்குரிய நாடு முழுவதையும் நன்கொடையாக வறியார்க்கு வழங்கிய பாரியின் பெருந்தகைமையை அவர் வியந்து பாடினார். இத்தகைய வள்ளலைத் தமிழ் மன்னர் மூவரும் சேர்ந்து வஞ்சித்துக் கொன்றபோது ஆறாத் துயரம் அடைந்தது.கபிலரது நெஞ்சம். அந்நிலையில் பாரியின் பெண்மக்கள் இருவரும் அவரைத் தஞ்சம் அடைந்தனர். செஞ்சொற் கவி பாடும் திறம் படைத்த அந் நங்கையர் தாம் பன்னாள் வாழ்ந்த பறம்பு மலையை நோக்கி,