பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 ஆற்றங்கரையினிலே

ஆயினும் பாரியின் தோழமையை அவர் மறந்தாரல்லர். பகலவன் இல்லாத வானம் போல் ஒளி மழுங்கி இருந்தது பாரியை இழந்த தமிழகம். ஒரு நாள் பெண்ணையாற்றின் கரையில் அமர்ந்து பாரி வள்ளல் செய்த நன்மை யெல்லாம் எண்ணினார் கபிலர்: பெருந்துயரில் மூழ்கினார் என்றும் மறக்க முடியாத துயரத்தை மாற்றும் வழியொன்று கண்டார். புனிதமாய பெண்ணையாற்றில் நின்ற பாறை யொன்றில் நெருப்பை வளர்த்தார். வள்ளல் பாரியை உள்ளத்தில் வைத்து அந் நெருப்பிலே பாய்ந்து உயிர் நீத்தார். திருக்கோவலூரில் உள்ள கபிலக் கல்லும் இச் செய்தி சொல்லும்.’

  • பாரி மகளிரின் திருமணத்தைப்பற்றியும் கபிலரது மரணத்தைப்பற்றியும் வேறு விதமாகச் சொல்லும் நூல்களும் உண்டு.