பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. திருவெண்ணெய்நல்லூர்

தென் பெண்னை யாறு பாயும் நன்னாட்டிலே திரு முனைப் பாடி என்ற நகரம் முன்னாளில் சிறப்புற்றிருந்தது. முனையர் என்னும் பெயருடைய பழந் தமிழ்க் குலத்தாரின் பெருமைக்கு ஒரு சான்றாக நின்றது. அந் நகரம். நாளடைவில் அந் நகரத்தைத் தன்னகத்தே உடைய பெண்னை நாடு திருமுனைப்பாடி நாடு என்னும் பெயர் பெற்றது.

தக்கோர் பலர் அந் நாட்டிலே தோன்றினர். தேவாரம் பாடிச் சிவ நெறியையும், செந்தமிழையும் பரப்பிய மூவருள் திருநாவுக்கரசரும், கந்தரரும் திருமுனைப்பாடி நாட்டிலே பிறந்தருளினர்.

அந் நாட்டில் உள்ள பழமையான ஊர்களில் ஒன்று திருவெண்ணெய் நல்லூர், பெண்ணை யாற்றின் தென் கரை யில் பொருளும் அருளும் பொருந்தித் திகழ்ந்தது அவ்வூர். முந்தை நாளில் விந்தையான வழக்கு ஒன்று அங்கு நிகழ்ந்தது.

திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த நாவலூரில் ஆரூரன் என்னும் பெயருடைய அந்தணர் ஒருவர் இருந்தார். அவர் திருவெண்ணெய் நல்லூர்ப் பெரு முனிவனாகிய பித்தனுக்கு ஓர் அடிமைச் சீட்டு எழுதிக் கொடுத்தார். நானும் என் குடி வழியில் வருவோரும் வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு அடிமை செய்யக்