பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 ஆற்றங்கரையினிலே

பன்னிராண்டு நிரம்பாத திலகவதியாரின் கருத்தை அறிந்தார் மருள் நீக்கியார் மனம் பதைத்தார் கண்ணிர் வடித்தார்; தமக்கையின் அடிகளில் விழுந்து துடித்தார். “ மங்கையர் திலகமே 1 அறியாப் பருவத்தில் தந்தையும் தாயும் இழந்தேன்; உம்மையே நம்பி உயிர் வாழ்கின்றேன். என்னை நீரும் கைவிட்டால் ஏழையேன் என்ன செய்வேன்? எவ்வாறு உய்வேன்? உயிர் துறக்கும் கருத்தை நீர் மாற்றா விட்டால் நும் கண்ணெதிரே என் உயிரை மாய்ப்பேன்.” என்றார்.

அருமைத் தம்பியார் வடித்த கண்ணிர் திலகவதியாரின் உள்ளத்தைக் கரைத்தது. வழக்கத்தைத் தழுவி இறப்பதோ, அன்றிக் கடமையைக் கருதி இருப்பதோ என்ற கேள்வி அவர் மனத்தை அலைத்துக் குலைத்தது. ஆயினும் இறைப் பொழுதில் ஒரு நிலைப்பட்டது அவருள்ளம். உடன் பிறப்பு என்னும் பாசம் உடன்கட்டையேறும் விருப்பத்தை வென்றது. தம்பியார் வாழ்தல் வேண்டும் என்னும் ஆசை யால் ஊரார் கூறும் வசையையும் பொறுக்கத் துணிந்தார் திலகவதியார்:

தமிழ் மொழியில் உள்ள அருங்கலைகள் அனைத்தையும் ஆராய்தல் வேண்டும் என்ற ஆசை மருள் நீக்கியார் மனத்தில் நிரம்பி நின்றது. பல்கலைக் கழகம் போல் விளங்கிய பாடலிபுத்திரப் பள்ளியை நாடிற்று அவர் உள்ளம். அப்பள்ளியிலே சமண சமயப் பாடங்களோடு நீதி நூல்களும், அளவை நூல்களும், காவியங்களும் முறை யாகப் பயிற்றப்பட்ட செய்தி அறிந்து அவர் அளவிறந்த ஆர்வம் உற்றார்.

அந் நாளில் தமிழகத்தை அணி செய்த சமணப் பள்ளிகள் சிறந்த கல்விச் சாலைகளாகவும் திகழ்ந்தன. கலை பயில் தெளிவும், கட்டுரை வன்மையும் வாய்ந்த சான்றோர் பலர் அப் பள்ளிகளில் ஆசிரியர்களாய் இருந்தனர்; தமிழ்