பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jv

நூல்களை அனைவரும் சுவைத்துப் பயன்பெறும் வகையில் வாரந்தோறும் நிகழ்த்திய பேச்சுகளை நேரில் கேட்கும். பேறு பெற்றேன். அதன் காரணமாகப் பிள்ளை அவர்களிடம் நான் கொண்டிருந்த ஈடுபாடு மேலும் பன்மடங்காகப் பெருகியது. பின்னர், கடந்த பல ஆண்டுகளாகச் சென்னைப் பல்கலைக் கழகப் பாடப் புத்தகக் குழுவில் நான் தலைவனாக இருந்த காலத்தில் அவர்கள் எனக்கு உறுதுணையாக இருந்து என் கடமையைச் செய்யப் பேருதவி செய்தார்கள்.

நமது மதிப்பிற்குரிய டாக்டர் சர். ஏ. எல். முதலியார் அவர்கள் சீரிய தலைமையில் சிறப்புடன் இயங்கும் சென்னைப்பல்கலைக் கழகம் தனது நூற்றாண்டு விழாவில் பேராசிரியர் அவர்கட்கு இலக்கியப் பேரறிஞர் (Doctor of Letters) பட்டம் வழங்கியபோது நான் பெற்ற இன்பம் அளவிடற்கரியது.

தமிழ்நாட்டு வரலாற்றிலேயே தமிழ்மொழிக்குச் சிறப்பளித்த சான்றோர்களுள் பேராசிரியர் சேதுப்பிள்ளை அவர்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள். அதற்குக் காரணங்கள் இரண்டு; ஒன்று, அவர்களது மொழித் தொண்டு; மற்றொன்று, அவர்களது அருட்கொடை.

பேராசிரியரின் மொழித்தொண்டு தமிழின் சிறப்பை நாடெல்லாம் அறிந்து போற்றச் செய்தது. அவர்களின் அருட்கொடையோ, சென்னைப் பல்கலைக் கழகத்தையும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தையும் சிறப்புறச் செய்து, ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் ஆண்டுதோறும் இப்பல்கலைக் கழகங்களில் நிகழ வழிகண்டது.

i பேராசிரியர் அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் சென்ற இருபத்தைந்து ஆண்டுகளாகப் பணியாற்றியதைப் போற்றுவதற்காக இவ்விழாக் கொண்டாடப்பெறுகின்றது. இந்த வெள்ளி விழா மலராக