பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. திருவதிகை

கெடில நதியின் வட கரையில் திருவதிகை என்னும் பெயருடைய பெருமை சான்ற பழம்பதி ஒன்றுண்டு. அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் புரியும் அதிகைப் பெருமான் அமர்ந்த ஆலயத்தில் திருத்தொண்டு செய்ய ஆசைப்பட்டார் திலகவதியார். அப்பதியிலுள்ள திருமடம் ஒன்றைத் தம் இருப்பிடமாகக் கொண்டார்; சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்; நித்தலும் பொழுது புலருமுன்னே திருக்கோயிலிற் போத்து அலகிட்டு மெழுக்கிட்டு அரும்பணி புரிந்தார், பூமாலை புனைந்து ஈசனுக்கு அணிந்தார்; பண்ணோடு இசைபாடிக் கண்ணிர் உகுத்தார்; வற்றிய மேனியராய் நற்றவம் புரிந்தார்.

இவ்வாறு தவநெறியை மேற்கொண்டு திலகவதியார் வாழ்ந்து வருகையில் அவர் தம்பியாகிய மருள் நீக்கியார் சிவநெறி துறந்து சயனர் ஆயினார் என்று கேள்வியுற்றார். நஞ்சு தோய்ந்த அம்புபோல் அச் செய்தி அவர் நெஞ்சத்தில் பாய்ந்தது. இச்செய்தியைக் கேட்பதற்கோ ஏழையேன் இது வரை உயிர் தாங்கி தின்றேன் என்று ஏங்கினார்; செந்நெறியாகிய சிவ நெறியை விட்டு மற்றொரு நெறியில் மருள் நீக்கியாரது மனம் எவ்வாறு கவிந்ததோ என்று மயங்கினார்; மம்மர் அறுக்கும் திருநீற்றை மறக்கவும் அவர் மனம் இசைந்ததோ என உருகினார்; திருவதிகைப் பெருமானிடம் தமது குறையை முறையிட்டுக் கண்ணிர்

பெருக்கினார்,