பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 - ஆற்றங்கரையினிலே

அவர் கையாலே பணி செய்த திருநகரில் அடி வைத்து நடப்பதற்கும் அஞ்சினர் சிவனடியார்கள். அந் நகரை அடுத்துச் செல்லும் கெடில நதியின் பெருமையும் உயர்ந்தது.

ஏறக்குறைய எண்பது ஆண்டுகள் இம் மண்ணுலகில் வாழ்ந்தார் திருநாவுக்கரசர். அவர் காலத்தில் ஞானத்தின் திருவுருவாய்த் திகழ்ந்த திருஞான சம்பந்தர் சின்னஞ் சிறு குழந்தையாய்ச் சிவத் தொண்டு செய்துகொண்டிருந்தார். அப் பிள்ளைப் பெருமான் திருநாவுக்கரசரைக் கண்டு சிந்தை குளிர்ந்தார்; அவரைத் தந்தையாகவே கருதினார். அப்பரே என்று அமுதம் உண்ட திருவாயால் அழைத்தார்: அன்று முதல் அப்பர் என்னும் அழகிய பெயர் திருநாவுக்கரசருக்கு உரியதாயிற்து. வாழ்தான் முழுவதும் இன்னிசையால் தமிழ் வளர்த்த நாவரசர், தமிழ் அப்பராய் நிலமிசை நீடு வாழ்கின்றார்.