பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 ஆற்றங்கரையினிலே

நள்ளிரவில் அவளிருந்த இடத்திற்குச் சென்ற இளவரசனை அயலான் ஒருவன் வெட்டி வீழ்த்தினான்.

நிகழ்ந்த செயலை அறிந்தான் நெடுமுடிக் கிள்ளி. மைந்தன் இறந்தானே என்று சிறிதும் மனம் வருந்தினர் னில்லை. “ ஒரு பசுவிற்குத் தவறிழைத்த அருமைப் புதல்வனைத் தானே கொன்று முறை செய்தான் என் குல முதல்வன், அந்த நீதி மன்னன் மரபில் தீயவனாகிய என் மைந்தன் தோன்றினானே மங்கையர் கற்பைக் காக்கும் கடப்பாடுடைய அரசகுமாரனே அதனை அழிக்க முற்பட்டான். அவன் கொலையுண்டது சரி. ஆயினும், என் கையால் ஒறுத்தற்குரிய மைந்தனை மற்றொருவன் கொன்றானே என்றுதான் என் உள்ளம் கொதிக்கின்றது. ஆரூர் வேந்தன் பெற்ற பேறு எனக்குக் கிட்டாது ஒழிந்ததே ! இனி இதை நினைத்து ஆவதொன்றில்லை. தீய மைந்தனது உடலை என் கண்ணிற் காட்டாமல் சுடலையிற் கொண்டு சுட்டு எரியுங்கள்” என்று கட்டளையிட்டான்.”

இவ்வாறு தமிழ் நாட்டு மன்னரும் மக்களும் மகனை முறை செய்த திருவாரூர் ச் சோழ மன்னனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தனர். அம் மன்னனை மனமாரப் போற்றினர்.”

தென்னாட்டில் எல்லையற்ற பெருமை வாய்ந்த நகரங்கள் தில்லையும் திருவாரூரும் தில்லையில் உள்ள கோயில் திருச்சிற்றம்பலம். திருவாரூரில் உள்ளது திரு மூலட்டானம். கோயில் என்ற பெயரைத் தனக்கே உரியதாக்கிக் கொண்டது தில்லைச் சிற்றம்பலம். ‘பூங்கோயில் என்ற அழகிய பெயருக்கு உரியதாயிற்று திரு மூலட்டானம்.

அந் நாளில் திருவாரூரில் நிகழ்ந்த திருவிழாக் காட்சிகளைத் தேவாரப் பாசுரங்களில் இனிய சொல்லோவியமாக எழுதிக் காட்டியுள்ளார்