பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 ஆற்றங்கரையினிலே

திருவாரூர் ஈசன் இம்மை இன்பமும் தருவார், மறுமை இன்பமும் தருவார். தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரு முதல்வர் அவர். ஆதலால், தியாகராசன் என்றும் தியாகேசன் என்றும் பெயர் பெற்றார். அவர் செய்த அரும் பெரும் தியாகத்தின் மாட்சியை விளக்கிப் போந்தார் குமர குருபர அடிகள். மாநிலம் முழுதும் உழுது உண்ண வல்லான் ஒருவனுக்கு அளித்தார்; நவநிதியையும் எடுத்து ஒருவன் கையில் கொடுத்தார்; அடியார்க்கு வீட்டை வழங்கினார்; பொன்னார் மேனியில் ஒரு பாகத்தைப் பெண்ணுக்கு ஈந்தார். இவ்வாறு நிலத்தையும் நிதியையும் வீட்டையும் பிறர்க்கு அளித்ததோடு தம் உடம்பிலும் ஒரு பங்கைப் பகிர்ந்து கொடுத்த தலைவரைத் தியாகர் என்று கூறுதல் புனைந்துரை யன்று, புகழுரையும் அன்று, பொருளுரையே என்று கூறுகின்றார் அடிகள்.

“ வையம் முழுதும் உழுதுண்ண

வல்லாற்கு அளித்து, நவநிதியும் கையில் ஒருவற்கு அளித்து, எமக்கே

கதிவீ டளித்து, ஒர் கன்னிகைக்கு மெய்யில் ஒருகூறு அளித்தனரால்

விமலர் கமலைத் தியாகர்என்பது ஐயர் இவர்க்கே தகும், முகமன்

அன்று, புகழும் அன்றாமே” என்பது அவர் பாடிய அழகான பாட்டு. மண்ணுலகை யெல்லாம் ஏனமாகி உழுதுண்ண வல்ல திருமாலுக்கு நிலமகளைத் தியாகேசர் கொடுத்தார் என்றால் உழுதுண்ண வல்லார்க்கே உரியது நிலம் என்னும் கொள்கை முழுமுதற் பொருளின் ஆதரவு பெற்றதுபோல் தோன்றுகிறதன்றோ?

பன்னலம் திகழும் பரம்பொருளை இன்னிசை

வடிவாகக் கண்ட பெருமை உடையது பண்டைத் தமிழ்நாடு. பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி !