பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. புகார் நகரம்

தமிழ் நாட்டிலே கடற்கரை நகரங்கள் பல உண்டு. அவற்றுள்ளே சாலச் சிறந்தது சென்னை மாநகரம். ஆயினும் சென்னை உருப்பெறுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே சோழ மண்டலக் கரையில் ஒரு பட்டினம் சிறந்து விளங்கிற்று. காவிரியாறு கடலொடு கலக்கும் இடத்தில் காட்சிக்கு இனியதாய் வீற்றிருந்த அப்பட்டினம் காவிரிப்பூம்பட்டினம் என்று பெயர் பெற்றது. இந்நாளில் பட்டணம் என்பது சென்ன பட்டணத்தைக் குறித்தல் போன்று முன்னாளில் பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினமே. பொன்னி என்னும் காவிரியாற்றின் நன்னீர் பாய்ந்து புனிதமாக்கிய முந்நீர்த் துறையில் அமைந்த பட்டினத்தைப் பூம்புகார் நகரம் என்று புலவர்கள் போற்றுவார் ஆயினர்.

சோழ நாட்டை ஆண்ட கரிகாற் சோழன் என்னும் திருமாவளவன் புகார் நகரத்தைத் திருத்தினான்; தலைநகர் ஆக்கினான். ‘ குண கடலின் கோமகள் என்று எந் நாட்டவரும் புகழத்தக்க ஏற்றமும் தோற்றமும் அளித்தான். அதனால் வாணிகம் சிறந்தது; செல்வம் செழித்தது; மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது.

இவ்வாறு நாட்டுக்குப் பெருநலம் புரிந்த திருமா வளவனைப் புலவர்கள் பாமாலை அணிந்து போற்றினர்; பொது மக்கள் மனமார வாழ்த்தினர். அம் மன்னன் பெற்ற பாமாலைகளுள் ஒன்று பட்டினப்பாலை, ! பட்டினம்