பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. திருச்சிராப்பள்ளி

சோழ நாட்டின் தலைநகராக விளங்கிய உறையூரின் அருகே உள்ளது ஒரு குன்று. “ சிராப்பள்ளிக் குன்று “ என்று அது தேவாரத்திலே குறிக்கப்படுகின்றது.

தென்னாட்டில் சமண சமயத்தைப் பரப்பக் கருதிய முனிவர்கள், தலைநகரங்களின் மருங்கே உள்ள மலைக் குகைகளைத் தம் இருப்பிடமாகக் கொண்டனர் என்பது ஒரு வரலாற்று உண்மை. பாண்டி நாட்டுத் தலைநகராகிய மதுரையின் அருகே அமைந்த எட்டுமலைகளில் அம்முனிவர்கள் வாழ்ந்தார்கள். பல்லவ மன்னரது தலை நகரமாகிய காஞ்சிபுரத்தின் அருகேயுள்ள திருப்பருத்திக் குன்றம் சமண முனிவர்களின் உறைவிடம் ஆயிற்று. அவ் வண்ணமே சோழ மன்னர் அரசு வீற்றிருந்த உறையூரின் மருங்கே நின்ற குன்றையும் அன்னார் உறைவிடமாகக் கொண்டனர். -

உறையூருக்குக் கிழக்கே நெடும் பெருங்குன்றம்’ ஒன்று உண்டு என்று அகநானூற்றுப் பாடல் அறிவிக்கின்றது.

“ கறங்கிசை விழவின்

உறந்தைக் குணாது நெடும்பெருங் குன்றம்”

என்று பாடியுள்ளார் ஒரு பழம் புலவர்,

அக்குன்றத்தின் உச்சியிலே சமண முனிவர் சிலர் தவச்சாலை நிறுவினர். அன்னவருள் ஒருவர் சிரா என்னும் பெயரினர். அவருடைய தவச்சாலை சிராப்பள்ளி