பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 - ஆற்றங்கரையினிலே

என்று பாடினார். ‘ பால் நினைந்து ஊட்டும் தாயாகவும் நின்ற பரமனே அறிவினுக்கு அறிவாய் நின்று அறிவிக்கும் இறைவனே ! கண்ணின் ஒளியாய் நின்று கானாதன வெல்லாம் காட்டும் கண்ணுதலே பேயனையும் ஆட் கொண்ட பெருமானே !’ என்று போற்றினார். அவர் திருவாக்கின் அடியாகத் தாயுமானவர் என்னும் பெயர் ஈசனுக்கு அமைவதாயிற்று. அவ்வண்ணமே அம் மலையில் எழுந்தருளியிருக்கும் அம்மையின் பெயரும் திருநாவுக் கரசரது தேவாரத்தின் அடியாக எழுந்ததாகும். மட்டுவார் குழலாள் என்ற அருமைத் தமிழ்ப் பெயரே இன்றளவும் அங்குள்ள அம்மையின் பெயராக வழங்கி வருகின்றது:

இலங்கை வீரனாகிய திரிசிரனை அம்மலையோடு இணைத்துத் திருச்சிராப்பள்ளியைத் திரிசிராமலை என்றும், அதைச் சார்ந்த நகரத்தைத் திரிசிரபுரம் என்றும் கூறுவதுண்டு குன்று தோறாடும் குமரவேளின் புகழ் பாடிய அருணகிரியார்,

“ திரிசிராமலை மேலுறை வீர’

என்று அப்பெருமானைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

திருச்சிராப்பள்ளியின் பெருமை படிப்படியாக உயர்ந்தது. மலையின் அடியில் எழுந்த ஊர் சிறந்த நகரமாக வளர்ந்தது. பழைய தலைநகரமாகிய உறையூர் சிற்றுார் ஆகக் குறுகிற்று. இப்பொழுது திருச்சிராப்பள்ளியின் ஓர் அங்கமாக அமைந்துள்ளது உறையூர்.

ஏற்றத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே, தவப் பெருஞ்செல்வர் ஒருவர் திருச்சிராப்பள்ளியிலே தோன்றினார்; தாயுமானவர் என்னும் பெயர் கொண்ட அப்பெரியாரைத் தமிழ் நாடு நன்கறியும். அவர் பாடியருளிய இன்பத் தமிழ்ப் பாடல்கள் கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பாகும். இறைவன்