பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவரங்கம் 92 என்பது சிலப்பதிகாரம் எழுதிக் காட்டும் சிறந்த சொல் ஒவியம். இப்பாட்டிலே துருத்தி என்ற பெயரால் குறிக்கப் படுகின்றது திரு அரங்கம்.

முன்னாளில் துருத்தி என்ற பெயர் ஆற்றின் நடுவே எழுந்த ஊர்களுக்கு அமைந்தது. சோழவள நாட்டில் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள குற்றாலத்தின் பழம் பெயர் திருத்துருத்தி என்பதாகும். அது பாடல் பெற்ற பழம்பதி. காவிரியாற்றின் நடுவே அந்நாளில் கண்ணுக்கு இனிய காட்சி அளித்த திருத்துருத்தியில் அமர்ந்த ஈசனைத் தூய நறுந்தமிழ் பாடித் தொழுதார் திருநாவுக்கரசர்.

“பொன்னியின் நடுவு தன்னுள்

பூம்புனல் பொலிந்து தோன்றும் துன்னிய துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே “ என்பது அவர் திருவாக்கு. பிற்காலத்தில் காவிரியின் போக்கு மாறியது. துருத்தி என்ற பெயரும் மறைந்தது. குற்றாலம் என்ற பெயர் அதற்கு அமைந்தது. திருப்பூந் துருத்தி என்பது மற்றொரு பழம்பதியின் பெயர். அப் பெயர் இன்றும் வழங்கி வருகின்றது.

மலை நாட்டு முடி மன்னரும் போற்றிப் புகழும் பெருமை சான்ற கோவில்களை உடையது காவிரித் திருநாடு. சேர நாட்டில் அரசு வீற்றிருந்த சேரமான் பெருமாளின் உள்ளத்தைக் கவர்ந்தது தில்லைச் சிற்றம்பலம்; மற்றொரு சேர மன்னனாகிய குலசேகரப் பெருமாளின் மனத்தை ஈர்த்த மணிக்கோயில் திருவரங்கம். சைவ உலகத்தில் கோயில் என்று ப்ோற்றிப் புகழப்படும் பெருமை சான்றது தில்லைச் சிற்றம்பலம். அவ் வண்ணமே வைணவ உலகத்தில் பெரிய கோயில் என்று புகழ் பூத்துத் திகழ்வது திருவரங்கம். தில்லை நடராசனையும் திருவரங்க நாதனையும் திசை நோக்கித் தொழுதனர் அம் மன்னர்