பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வல்லிக்கண்ணன் 'இதய அகலில் ஏற்றிய தீபம் என்றன் துணிவடா-துன்ப விதவிதமான புயலின் நடுவின்ரிலும் வென்றதம் மணியடா!' பெருங்கவிக்கோவின் துணிச்சல் வியக்கப்பட வேண்டி யதேயாகும். தனக்குப் பிடிக்காத முறையில், சரியில்லாத கருத்தை, யார் எங்கே சொன்னாலும், அந்த இடத்தி லேயே எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தயங்கமாட்டார் அவர். கவி அரங்கத்தில் தலைமை வகிப்போருடன் அவர் கருத்து மோதல் நடத்தியிருக்கிறார். பெருங்கவிக்கோ ஐயப்ப பக்தர். சபரி மலைக்குப் போவதற்கு நோன்புகள் ஏற்று நெறிமுறைகளை கடைப் பிடிப்பவர். அவருடைய கோலத்தை ஒரு கவி அரங்கத்தின் போது தலைமைவகித்த பகுத்தறிவுவாதி பழித்துப் பேசி விட்டார், அதனால் கொதிப்புற்ற கவிஞர் உணர்ச்சி வேகத்தோடு கவிதையில் சாடினார் தவிப்புடைய நெஞ்சன் நான் சார்வதோ தெய்வ நெறி! சாமியே சரணமெனச் சார்வாசல் அவ்வாசல் நேமித்த ஒழுக்கமுறை - நேர்மை நிலைஉணர்ந்ே இக்கோலம் பூண்டுள்ளேன் இதனைத் தலைமைகொள் தக்கோன் அறியாமல தவக்கோலம் பழிக்கின்றான்! ஆமாமாம். சாமிகளாய் அரைவயிற்றுக் கஞ்சிக்காய்