பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 0 95 உள்ளவாறு உரைக்கும் இயல்பினைப் பெற்றிருப்பது தான். கவிஞர் தனது தன்மையை ஒரு அரங்கில் வெளிப் படையாகவே எடுத்துச் சொல்லியிருக்கிறார் 'உண்மைதான் கூறவந்தேன்... உள்ளபடி காட்டினேன் காண் எவரின் நெஞ்சும் புண்பட்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல! பொய் சொல்லி மெய்மறைத்துப் பேருக்காகக் கண்மூடிக் கருத்துரைக்க அறியேன்! நானோர் கவிக் கரும்பைக் கடித்துணரும் குழவி! மேலாம் வண்ணத்தால் பொய்பூசி பித்தளையாய் வாழ்கின்ற போலிகளை வதைக்கும் என்பர்!’ தன் திறமையில் திடமான நம்பிக்கை கொண்ட உள்ளம் தான் இவ்விதம் நாவலிக்க முடியும். அவர் தேர்ந்து கொண்ட கொள் கையில், பாடுபடுகிற லட்சியத் தில், அவருக்கு தீவிரமான பற்றுதல் இருக்கிறது. அதை எப்படியும் செய்தே முடிக்க வேண்டும் என்ற உறுதி அவருக்கு இருக்கிறது. அது அவருடைய தன்னம்பிக் கையை வளர்க்கிறது. ‘சிதறிக் கிடக்கும் என்றன் இனத்தைச் சேர்த்து வைக்கப் புறப்பட்டேன்-நம்முள் பதறிச் சாகும் தமிழினத்தின் வெற்றிப் பாதை அமைக்கப் புறப்பட்டேன்!