பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 வல்லிக்கண்ணன் எல்லோரும் இன்பமாய் வாழ வேண்டும் என விரும்பு கிறார் பெருங்கவிக்கோ. அவரவர் குடும்பமும் உறவின் முறையாரும் வறுமை இல்லாமல் வாழவும், தீமை உள்ள சிறுமைகள் இல்லாமல் சீர் பெறவும் ஒவ்வொருவரும் எண் ண வேண்டும் என்று அவர் கூறுகிறார் . ஆசையை அடக்கு, இன்பங்களைத் துறந்துவிடு என்று சந்நியாசிகள் போதிப்பதை கவிஞர் ஆதரிக்கவில்லை. "ஓங்கும் நல்லாசை உயரட்டும் வான்விஞ்ச தேங்கு நல்நிலைகள் சிறக்கட்டும் பறக்கட்டும்! கொதிக்கும் மனத்தாசை கொழுந்து விட்டே எரியட்டும்! மதிக்கும் அருளாட்சி மாட்சி அங்கே செழிக்கட்டும்! மறவாதீர் விருப்பொன்றே மங்கலமாய் வாழ்வதற்குத் திறமான கருப்பை!’ என்று அவர் அறிவுறுத்துகிறார். பெருவேந்தன் புத்தன் பேராசையை துறந்தான். துறப்பதற்கு அவனிடம் இருந்தது. அதனால், ஒப்பற்ற வேந்தனவன் துறந்தான். ஒன்றுமே இல்லாத ஒட்டாண்டி களான சாதாரண மக்கள் இன்றே விடுக்கின்றேன் எல்லாம் துறக்கின்றேன் என்றால் எதைத் துறப்பார்கள்? “நின்று வருந்தி நேர்மை உழைப்பீந்து வென்று பின்னர் நாம் விரும்பும் நலம்பெற்றே சென்றால் துறவுக்குச் சிறப்புண்டாம் ஒன்றுமே இல்லாதான் புத்தனை எடுத்துக்காட்டாய்க் கூறி வல்லடி பேசுவதா வாய்மை? புத்தன் போல் சித்தம் வரவேண்டல் சிறப்பு அவர் கொண்ட இத்தரை மதிபொருளை இழக்க ஈட்டியபின்!”