பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 113 ஒத்த உயிர் உடன்பிறப்பும் மெத்தப் பொய்மை பெய்யலாம். ஓங்குபுகழ் ஞானி உள்ளம் கூடக்கள்ளம் - செய்யலாம். கற்புடைய பெண்களிலும் காதகிகள் உண்டடா . வேசிக் கன்னியருள் கூடப்பண்புப் பெட்டகங்கள் நன்றடா: கற்றவருள் கூடத்தீய கள்வர்களும் உண்டடா ஒன்றும் கல்லாதாரில்கூட உண்மை நல்லவர்கள் நன்றடா!' ஆகவே விருப்பு வெறுப்புகள் கொண்டு வீழ்ச்சி அடையாமல், பகை வளர்த்து இன்னலில் ஆாமல், அனைத்தையும் கண்டு தேர்ந்து தெளியும் ஞானமும் கூகிய சிந்தனை ஆற்றலும் பெறவேண்டும் என்பதே கவிஞரின் குறிக்கோள். -

  • குறிக்கோள் நெஞ்சம் கொண்டு சுமந்தே கோபுர வாழ்வைக் குறிப்பேன்-இன்ப வெறிகொள் எண்ணம் சுமந்து சுமந்தே விரும்பித் துன்பம் ஏற்டேன்! மெய்யே நினைந்து விடிவே கருதி வெல்லும் வகையில் உழைப்பேன்-மேன்மை எய்யும் உணர்வை இத உலையில் இட்டே எஃகாய்ச் சமைப்பேன்!?

என்று அவர் தனது உள்ளத்தின் இயல்பையும் வெளிப் படுத்துகிறார். நினைத்தது எல்லாம் நினைத்தபடி நடக்காமல் போகலாம்; அதற்காக நெஞ்சம் மலைக்கலாகாது; மனத் தினில் எண் ணியவை மாறிப் போய்விடின் மயங்கிச்