பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 வல்விக்கண்ணன் ஒரு கவி அரங்கத்தில் பெருங்கவிக்கோ தலைமை தாங்க நேர்ந்தது. அங்கே அரங்கில் அவர் போற்றும் அறிஞர்கள் சிலரும் இருந்தார்கள். அவர்களில் ஒருவரை தலைமை வகிக்கும்படி செய்யாமல், தம்மைத் தலைவராக் கியது பொருத்தமில்லை என்று கூற விரும்பிய கவிஞர் அழகான உவமைகளோடு இனிய கவிதையில் சுட்டியது. நயமானதாகும். அவ்வரிகள்தான் இவை :

  • வெண்ணிலா எரியும் போது

விளக்கினை ஏற்றல் போலும் தண்ணிய தடாகத் துள்ள தாமரைப் பூவை அந்தோ! கண்ணிலான் பார்க்கச் செய்ய கட்டாயப் படுத்தல் போலும்’ என்னை நீர் தலைமை ஏற்கப் பணித்திரே என்று குறை கூறியுள்ளார். கற்பனையில் ஆழ்ந்து விடாமல் வாழ்க்கை யதார்த் தங்களைப் பாடும் கவிஞர்கள் செயலை அவர் இவ்வாறு வியக்கிறார் புனல்நடு ஒடம் போவதைப் போலே-வரும் புகைநடு கனலும் ஒளிர்வதைப் போலே வனம் நடு பசுமை மிளிர்வதைப் போலவே-ஆல் மரம் நடு நிழலின் குளிர்மையைப் போலே. மனம் நடு அன்பின் மகிழ்ச்சியைப் போலே . . . . . . . * . . - கற்பின் மாதரார் நடை கண்ட நெறியினைப் போலே கனவிலா வாழ்வு நனவுகள் பாடும் போற்றும் கவிஞர்’