பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 வல்லிக்கண்ணன் வடிவம் கொடுக்க அவர் முனைந்ததின் விளைவுதான் கெளதமரின் கண்ணிர்’. புத்தரின் சீடர்கள் என்றும், பெளத்த தர்மத்தைப் போற்றுவோர் என்றும் சொல்லிக் கொண்ட துறவிகளும் கயவர்களுமே வெறிச் செயலில் ஈடுபட்டு. அப்பாவித். தமிழ் மக்களைக் கொன்று குவித்ததையும் தமிழ் மக்கள். அவர்கள் உழைத்துப் பண்படுத்தி வளம் சேர்த்த நாட்டை விட்டு ஒட வேண்டிய அவசியம் ஏற்பட்டதையும் எடுத்து. சொல்வதற்கு கெளதம புத்தரையே காவியத் தலைவனாக -நா ட க நாயகனாக- நடமாட விட்டுருப்பதும், வெவ்வேறு மதப் பற்றாளரை (புத்த பிச்சுக்கள். தமிழ்த். துறவி, கிறித்தவப் பாதிரி, இசுலாமிய இமாம்) ஆகியோரை சந்தித்து உரையாடச் செய்திருப்பதும் பாராட்டப்பட வேண்டிய உத்தி ஆகும். மேலும், விடுதலைப் புலிகள், இராணுவத்தினர், உழைக்கும் மக்கள் இலங்கைக் குடியரசுத் தலைவர், மற்றும் அமைச்சர்கள் முதலானோரை புத்தர் சந்தித்துப் பேசுவதும், அவர்கள் தத்தமது கொள்கைகளையும் கருத்துக்களையும் கூறுவதும் இறுதியில் கெளதமர் குடியரசுத் தலைவர் மற்றும் அமைச் சர்களிடம் அங்குலி மாலன் கத்ையைக் கூறி அறிவுரை கூறுவதும் காவியத்துக்கு நாடகத்தன்மையை அளிக்கிறது. 'இனத்தால் மொழியால் வேறு வேறாக இந்த வையம் வளர்த்தவர் யார்? மனத்தால் பேதமை மாறுபாடாக்கி மன்பதை தன்னைக் கெடுத்தவர் யார்? எந்த மொழியோ எந்த இனமோ எவரெவர் பேசி வாழ்ந்தாலும் அந்த இனத்தனும் மனித இனமாய் ஆவான் என்பதை ஆறியாரோ?