பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 வல்லிக்கண்ணன் கொண்டதாகும். சாதி சமுதாயப் பார்வை கொண்ட தாகும். சாதி வேற்றுமைகள் சமூகங்களை, ஊர்களை, நாட்டை நாசப்படுத்திக் கொண்டிருக்கும் நச்சுத்தனங்கள் ஆகும். சாதி அடிப்படையில் உயர்வு தாழ்வு பேசி, கலவரங்கள் வளர்த்து, மனிதத்தன்மை இழந்து வெறியர் களாகிக் கண்முடித்தனமாகக் கொலைகள் செய்து களிக் கிறார்கள் சாதிப்பற்று மிகுந்த கொடியவர்கள். இவர்கள் நல்லவர்களை வாழ விடுவதில்லை. இவ் அவலங்களைக் கண்டு உளம் குமையும் கவிஞர், "சாதிகளே இல்லாச் சமுதாயம், மதச் சண்டைகள் வாராச் சமுதாயம் எங்கும் வருகின்ற நாளே நமக்கு விடிவுகள் உண்டாகும் நாளாகும் என்று வலியுறுத்து வதற்காக இருண்ட மேகங்கள் காவியத்தைப் படைத் திருக்கிறார். அவர் பணி புரிந்து வந்த ஊர்களில் நிலவிய சாதி வெறியையும், அதனால் வளர்ந்த பிணக்குகளையும் பகை முற்றி ஒரு பேரூரில் வெடித்த கலவரம் அந்த வட்டாரத்திலும், தொடர்ந்து நாடு முழுதும் பரவிய கொடுமையையும் நேரில்கண்டறிந்தவர் பெருங்கவிக்கோ. ‘இன்று தாழ்வு உயர்வு பார்க்கும் பேதமை முன்பை விடச் சற்றுக் குறைந்திருப்பினும், நீறு பூத்த நெருப்பா கவே இன்னும் உள்ளது. இந்த இழிவைப் போக்கிச் சமம் காணும் நெறி வளர்க்கும் உந்துதல் இளமை தொட்டே அவருக்கு ஏற்பட்டிருந்தது அனுபவங்களை யும் உண்ர்வுகளையும் அடிப்படையாக்கி அவர் 1986ல் "இருண்ட மேகங்கள் காவியத்தைப் படைத்தார். "நிலையில்லா உலகத்தில் நிலைத்த தென்ன? நெஞ்சங்கள் இணைகின்ற அன்பொன்றேதான்! மலைபோன்ற உறுதிக்கு மூலம் என்ன? மனதினிலே பதிகின்ற அன்பொன்றேதான்!