பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

ஒரு கோட்டுக்கு வெளியே ...


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 175 மாட்சி மலர் கண்டிமா நகரம், தாரணியின் சண்பகமலர் சான் பிரான்சிஸ்கோ, பிச்சாவரம் பச்சைக்காடு, இலங்கை பயணத்தின் போது, கடல் மேல் மிதந்த கருத்து நாவாய் கள்’ எனும் தலைப்புகளில் எழுதப்பட்ட அழகுக் கவிதை கள் அழகின் வெள்ளம் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இயற்கைச் சூழ்நிலைகளின் இனிய சித்திரங்களாகக் கவிதைகள் மிளிர்கின்றன. அங்கு குழுமுகின்ற மக்கள் பண்பு ஆண்கள் பெண்களின் இயல்புகள் செயல்கள், கவிஞரின் உணர்வுகள் பற்றி யெல்லாம் இக்கவிதைகள் எழிலுறப் பாடுகின்றன. இயல்பான சொல் ஒட்டம், ஓசை நயம், கற்பனை அழகு, வர்ணிப்புத்திறன் உவமை எழில் ஆகியவை பெருங்கவிக்கோவின் கவிதைப் படைப்பு களுக்குத் தனிச்சிறப்புத் தருகின்றன. மலை நாட்டில் பயணம் செய்த அனுபவம் பற்றி ஒரு கவிதை கருநீலப் பட்டா டையைக் கட்டிய இயற்கைத் தாயாள் தருகோல ஆடை மின்னும் சரிகையின் ஒளியைப் போன்றும் திருகோல விண்மீன் போன்றும் திகழ்முத்துச் சுடரைப் போன்றும் வருகோல ஒளிகள் மின்னும் வழி ஒடும் எங்கள் உந்து. சுற்றிலும் மரங்கள் கூட்டம் தொகை தொகையாக ஓங்கும்! முற்றிலும் ரப்பர் தோட்டம் முன் பின்னும் பால் மரங்கள்! அற்றவர் செல்வம் தேட ஆர்வங்கள் கொள்வதைப் போல்