பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

ஒரு கோட்டுக்கு வெளியே ...


176 - வல்லிக்கண்ணன் பெற்றசீர் அடைதல் போல்நல் பெருமை போல் சூழும் காட்சி!? இவ்வாறே காடுகள், ஆறு, அருவி முதலியவற்றை அழகுமிகு கவிதைகளில் பெருங்கவிக்கோ வியந்து வர்ணித். திருக்கிறார். அவை பன்முறை படித்துச் சுவைக்கப்பட வேண்டியவை. முக்கியமாக, நயகரா எனும் இயற்கை. விந்தையை ரசித்து அவர் பாடியிருக்கும் கவிதைகள். "விளிம்பினி லிருந்தே இன்ப வெண்ணுரை தொடர்ந்து வீழும் முளிபனிக் கட்டி யாமோ? முதிர்தொங்கல் ஒளிக்கற்றையோ? களிபெரும் இன்ப ஆட்சிக் கதவுகள் திறந்ததோ?எப் பளிங்கு மண்டப மிடிந்தே பாறையாய் தொடர்ந்து வீழும்!" . என்று நயகரா அருவியைக் கவிஞர் வியக்கிறார். இவ்விதம் விந்தைக் காட்சிகள் தந்த வியப்புகள் இனிய பாக்களாக மலர்ந்துள்ளன. அவற்றுள் பலவற்றை. எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற ஆசை எழுகிறது. இடம் தான் இல்லை. இரண்டு கவிதைகளை மட்டும். எழுதி நிறுத்திக் கொள்கிறேன். பொங்கிச் சிதறும் சாரல் பூ எங்கணும் வெண்புகைகள் எங்கணும் மழைநீர்ச்சாரல் பொங்கியே சிதறு மாபோல் பொலிமுகப் பார்வை யாளர் அங்கங்கள் தெரிக்கும் ஈதை அவர்மழைக் கோட்டுத் தாங்கும்! மங்கைகள் ஆடவர்கள் மருளுவர் கண்ணால் பார்க்க