பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

ஒரு கோட்டுக்கு வெளியே ...


178 0 வல்லிக்கண்ணன் தனத்தால் ஏழ்மைச் சரிவால் ஒற்றுமைத் தடைகள் கோடி எழுவதோ? தரணி தாழ்ந்து உழன்று அழுவதோ காற்றும் ஒன்று கதிர்வான் ஒன்று கடலும் புனலும் ஒன்றுதான்-பூமி தோற்றம் ஒன்றே ஏற்ற இறையாம் ஆற்றலதுவும் ஒன்றுதான்-ஒருமை மாற்றம் இயற்கை உண்டோ காண்! பிரிந்தோ சேர்ந்தோ அன்பின் வழியில் உரிமை உலகு ஒன்றென்போம்-குருதி பெரிதும் சிந்தி உயிர்கள் கொல்லும் . பிழைசெய் ஒற்றுமை தீதென்போம்! அன்பின் வழியே ஒருமைப் பாடென்போம்! எந்த நாட்டில் எந்த வளமான சூழ்நிலையில் இருந் தாலும், பெருங்கவிக்கோவின் அன்பு உள்ளம்-கருணை உள்ளம்- வாழ்க்கை முரண்பாடுகளை, மனிதகுல அவலங். களை எண்ணி வேதனைப்படுவது இயல்பாக இருக்கிறது. இதை உணர்த்தும் குறிப்புகள் அவருடைய பயண நூல் களில் காணக்கிடக்கின்றன. அவற்றில் ஒன்றை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். "ஒரு பெரும் விருந்து நடைபெற்றது. காணவே கண்கள் போதாது. உண்ண வயிறும் இடம் தராது. முன்பு கிரேக்க நாட்டின் தலைநகர் ஏதென்சு அருகில் உள்ள கோர்பு தீவில் நடந்த உலகக் கவிஞர் மாநாடு சென்றிருந்த பொழுது கண்ட உணவு பழ வகைகளை விட அதிக அளவில் விருந்துணவு வகைகள், பழவகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எகிப்து ஒரு தன்னிறை வற்ற வறுமை நாடுதான், இருப்பினும் இங்கே கொடுத்த விருந்து உணவுகள் கொடி கட்டிப் பறந்தன!