பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 □ வல்லிக்கண்ணன்


"நாளைச் சாவேன் என்றே யானும் நாளும் கடமை செய்வேன் எந்த வேளைப் பொழுதும் வேலை செய்தே வினைசெய் முகிலாய்ப் பெய்வேன்' என்ற உள்ளுணர்வோடு ஒயாது உழைத்து, தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் தேவையான, அவசிய மான, பணிகளை செய்து வருகிறார். ‘சிதறிக் கிடக்கும் என்றன் இனத்தைச் சேர்த்து வைக்கப் புறப்பட்டேன்-அஞ்சிப் பதறிச் சாகும் தமிழினத்தின் வெற்றிப் பாதை அமைக்கப் புறப்பட்டேன்’ என்றும், தீய தன்னலத்தை வெறுத்துத் தள்ளி தமிழெடுத்துப் புறப்பட்டேன்’, ‘கயமை சாடும் கருத்தும் ஏந்திப் புறப்பட்டேன்’ என்றும் அவர் அறிவிக்கிறார். கவிதையின் உயர் சக்தியை நன்கு உணர்ந்தவர் பெருங்கவிக்கோ. 'கவிதையைக் கையாளும் கவிஞன். உண்மை. ஒழுக்கம், உயர் தன்மை உடையவனாக இருந்: தால் மாபெரும் உண்மையை உலகுக்கு உணர்த்த இயலும் இந்த உண்மை வழி வென்ற மகாகவி பாரதி, மற்றும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வழியில் எண்ண ஒட்டத்தை எப்படித் தரவேண்டும் என்ற உணர்வுடன்" அவர் எழுதிச் செல்கிறார். திருவள்ளுவரின் குறள்நெறி யும் அவருக்குத் துண்டுதலாக அமைந்துள்ளது. தனி ஒருவனுக்கு உணவிலை எனின் ஜகத்தினை அழித்திடுவோம்’ என மனிதநேயத்தோடு முழக்கமிட்டார் மகாகவி பாரதியார்.